கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கக் கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்றோர்கான நலச்சங்க மாநில துணைத் தலைவர் ஞானதாஸ் தொடங்கிவைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "குறைந்தபட்சம் ஓய்வூதியமாக ரூ 9000 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ 3000 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் இஎஸ்ஐ அல்லது மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். 2000 ஆண்டில் நிறுத்தப்பட்ட ஆண்டு நிவாரண தொகையை வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் உயர்ந்த முழுமையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்றனர்.
இதையும் படிங்க:'முதலமைச்சருக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?' - அமைச்சர் செங்கோட்டையன்