கன்னியாகுமரியில் இன்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து கீழே விழுந்தன. இந்த சூறைக்காற்றில் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல் துறையினருக்கான புறக்காவல் நிலையத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது காவலர்கள் யாரும் பணியில் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடல் சீற்றத்துடனும், சூறைக்காற்று காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்ந்து கடற்கரை பகுதிகளை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிரமாகக் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை மீனவர்கள்!