கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் மக்களை விழிபிதுங்க வைத்துவருகிறது. வெயில் தாக்கத்தால் நகரப்பகுதியில் இருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
இந்தச் சூழலில், குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்ப மிகுதி காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெயில் தாக்கம் குறைந்து மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று மதியத்திற்கு மேல் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் குமரியில் நிலவிவந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.