ETV Bharat / state

கின்னஸ் சாதனை முயற்சி: காஷ்மீர் முதல் குமரி வரை ராணுவ வீரர் சைக்கிள் பயணம்!

author img

By

Published : Oct 29, 2019, 10:40 PM IST

கன்னியாகுமரி: கின்னஸ் சாதனை முயற்சியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் வந்த ராணுவ வீரரை, அவரது நண்பர்கள் வரவேற்றனர்.

காஷ்மீர்-குமரி வரை ராணுவ வீரர் சைக்கிள் பயணம்

ஹரியானாவைச் சேர்ந்தவர் லெப்டினென்ட் கர்னல் பாரத் பன்னு (36). இவர் தற்போது பெங்களூருவில் ராணுவ அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். சைக்கிள் ஓட்டுவதில் வல்லவரான இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது நண்பர்களான டாக்டர் ஆர்த்தி நாக்ராணி, கதா சோனானிஸ்கர், ஜோதி திருப்பத்தி, சுசன்த் ஜாதவ், அர்ஹம் சேக், அப்துல் அஹத் சேக், விஷால் நாக்ராணி, அஜய் பக்க்ஷி ஆகியோரின் துணையுடன் கடந்த 21ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரிலிருந்து சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு கன்னியாகுமரியை வந்தடைந்தார். சுமார் 3604 கிலோ மீட்டர் தூரத்தை 8 நாட்கள் 9 மணிநேரம் 47 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார்.

காஷ்மீர்-குமரி வரை ராணுவ வீரர் சைக்கிள் பயணம்

இது குறித்து பாரத் பன்னு கூறுகையில், கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்தச் சாதனை முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன். முந்தைய சாதனையை இரண்டு நாள்கள் வித்தியாசத்தில் முறியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை எனது நண்பர்களின் உதவியால் செய்ய முடிந்தது எனக் கூறினார்.

முன்னதாக இந்தத் தூரத்தை 10 நாள்கள் மூன்று மணிநேரம் 47 நிமிடங்களில் கடந்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:காஷ்மீர் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3604 கி.மீ தூரத்தை 8 நாட்கள் 9 மணி நேரத்தில் கடந்து ஹரியானாவை சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் பாரத் பன்னு(36) என்ற இராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை முயற்சியாக இன்று கன்னியாகுமரி வந்தடைந்தார். அவருக்கு அவரது நண்பர்கள் கன்னியாகுமரியில் உற்சாக வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.Body:tn_knk_03_military_man_record_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

காஷ்மீர் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3604 கி.மீ தூரத்தை 8 நாட்கள் 9 மணி நேரத்தில் கடந்து ஹரியானாவை சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் பாரத் பன்னு(36) என்ற இராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை முயற்சியாக இன்று கன்னியாகுமரி வந்தடைந்தார். அவருக்கு அவரது நண்பர்கள் கன்னியாகுமரியில் உற்சாக வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஹரியானாவை சேர்ந்தவர் லெப்டிணன்ட் கர்னல் பாரத் பன்னு(36). இவர் தற்போது பெங்களூருவில் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சைக்கிள் ஓட்டுவதில் வல்லவரான இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது நண்பர்களான டாக்டர் ஆர்த்தி நாக்ராணி, கதா சோனானிஸ்கர், ஜோதி திருப்பத்தி, சுசன்த் ஜாதவ், அர்ஹம் சேக், அப்துல் அஹத் சேக், விஷால் நாக்ராணி, அஜய் பக்க்ஷி ஆகியோரின் துணையுடன் கடந்த 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரிலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேஷ், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழகம் கன்னியாகுமரியை வந்தடைந்தார். அவர் சுமார் 3604 கிலோ மீட்டர் தூரத்தை 8 நாட்கள் 9 மணிநேரம் 47 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த சாதனை முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன். முந்தைய சாதனையை 2 நாட்கள் வித்தியாசத்தில் முறியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை எனது நண்பர்களின் உதவியால் செய்ய முடிந்த்து என்றார். இதற்கு முன்பு இந்த தூரத்தை 10 நாட்கள் 3 மணிநேரம் 47 நிமிடங்களில் கடந்த்தே கின்னஸ் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.