ETV Bharat / state

நெதர்லாந்து தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பெண் காவலருக்கு உற்சாக வரவேற்பு - cheering reception for the female guard

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற உயரம் தாண்டுதலில் தங்க பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் காவலர் கிருஷ்ண ரேகாவிற்கு, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெதர்லாந்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலருக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : Aug 7, 2022, 1:33 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் கிருஷ்ணரேகா. இவர் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று மகளிர் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற போலிஸ் பெண் வீராங்கனை கிருஷ்ணரேகா நேற்று (ஆக. 6) ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார். இதில் ஏராளமான காவலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

நெதர்லாந்து தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பெண் காவலருக்கு உற்சாக வரவேற்பு

கிருஷ்ண ரேகா ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு வீரர்கள் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீ. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.