தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டு 143 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
இதில், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதேபோன்று தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய சேர்மன் அழகேசன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதையும் படிங்க: இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்!