ETV Bharat / state

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்! - Government school

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு வீசிய சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்
author img

By

Published : May 1, 2019, 7:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடித்த பலமான சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளி கட்டடத்தின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.

மேற்கூரை இடிந்து விழுந்ததில், வகுப்பறைகளுக்குள் இருந்த நாற்காலிகள், மேசைகள், பாடபுத்தங்கள், மின்விசிறிகள் உட்பட பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கோடை விடுமுறை என்பதாலும், நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்

மேலும், பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பள்ளி கட்டடத்தை சீரமைத்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலே சூறாவளி காற்றில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

TN_KNK_01_01_GOVERNMENTSCHOOL_DAMAGE_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி குமரியில் நேற்று நள்ளிரவு அடித்த சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கம் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் ஓட்டினால் ஆன மேற் கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் பள்ளியில் இருந்த சேர் நாற்காலி பென்ச் மின்விசிறி பாட புத்தகங்கள் உட்பட பல ஆயிரம் ரூபாய் பொருட்கள் நாசம். கோடை விடுமுறையால் மாணவ மாணவியர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இறச்சகுளம் ஈசாந்திமங்கம் தாழாக்குடி செண்பகராமன் புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்று அடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அடித்த பலமான சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளி கட்டிடத்தின் ஓட்டினால் அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் மேற்கூரையில் பெரிய தடிகள் பள்ளி கூடத்தின் வகுப்பறையின் உள்ளே விழுந்ததில் வகுப்பறையின் உள்ளே இருந்த நாற்காலிகள் பென்ச் குழந்தைகள் அமர்வதற்கான வைக்கப்பட்டு இருந்த நூற்றுகணக்கான சிறிய சேர்கள் பாடபுத்தங்கள் மின்விசிறிகள் உட்பட பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம் ஆனது . மேலும் பள்ளியின் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் எந்த நேரமும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை என்பதாலும் நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததாலும் பெரும் உயிர் சேதம் தவிர்கப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கட்டிடங்கள் பலமிலந்து வருகிறது என்றும் ஆகையால் பள்ளியை சீர் அமைத்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிகை வைத்தும் மாவட்ட நிர்வாகம் சீர் அமைத்து தராமால் இருந்தததாலேயே சூறாவளி காற்றில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். விஷுவல் - சூறாவளி காற்றில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.