ETV Bharat / state

இளம் வயதில் தொழில் அதிபர் ஆன இளைஞர் -சந்தேகிக்கும் போலீசார் - Gold treasure issue car detained

கன்னியாகுமரி: குளச்சல் அருகே தங்க புதையலில் பங்கு கேட்டு இளைஞரை கடத்தி, இரண்டு சொகுசு கார்களை பறித்துச் சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

businessman jerlin
author img

By

Published : Oct 12, 2019, 2:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தக்காளிவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின். இவர் சம்பளத்திற்கு ஜே.சி.பி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக ஜே.சி.பி. வாகனம் ஒன்றை வாங்கி சொந்தமாக தொழில் செய்து வந்தார். ஒரு ஜே.சி.பி இயந்திரம் வாங்கிய சிறிது காலத்திலேயே, புதிதாக மூன்று ஜே.சி.பி.வாகனம், இன்னோவா கிறிஸ்டா மற்றும் மாருதி பிரீஸா என ஆறு வாகனங்களை வாங்கி மற்றவர்கள் இவரை பார்த்து வியக்கும் வகையில் தொழிலதிபராக வலம் வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெர்லின் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'கருங்கல் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு துணை ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரும் ரவுடி கும்பலுடன் வந்து தன்னை மிரட்டி நாகர்கோவில் நெல்லை நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு கடத்திச் சென்றனர்.

அப்போது, நீ ஜே.சி.பி ஆபரேட்டராக பணி புரியும் போது தங்க புதையல் கிடைத்துள்ளது. அதை வைத்து சொகுசு கார் மற்றும் ஜே.சி.பி வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறாய். எனவே, இதில் எங்களுக்கு பங்கு தந்தால் வெளியே சொல்லாமல் நமக்குள்ளேயே முடித்துக் கொள்வோம் என கூறியதுடன் தனது நகைகள் மற்றும் சொகுசு கார்களில் இரண்டையும் பறித்து சென்று விட்டனர்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இளம் தொழிலதிபர் ஜெர்லின்

அதனடிப்படையில் குளச்சல் ஏ.எஸ்.பி கார்த்திக் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார். இதனைத்தொடர்ந்து இளைஞர் ஜெர்லின், கருங்கல் காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இவிசாரணையில், போலீசார் இருவரும் தாங்கள் ஜெர்லின் மீது வந்த மொட்டை கடித புகாரின் பேரில் அவரை பிடித்து விசாரித்தோம் என்றும் கடத்தலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஏ.எஸ்.பி கார்த்திக் சிறப்பு துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய இருவரையும் காவல் நிலைய பணியில் இருந்து விடுவித்து கொல்லங்கோடு சோதனை சாவடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர் ஜெர்லினை மிரட்டி கடத்திச் சென்ற ரவுடி கும்பல் யார்? இவர் வாகனங்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குளச்சல் அருகே தங்க புதையலில் பங்கு கேட்டு வாலிபரை கடத்தி, 2 சொகுசு கார்களை பறித்து சென்ற கும்பல். போலீசாருக்கு தொடர்பா?, குளச்சல் துணை கண்காணிப்பாளர் விசாரணை.

Body:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தக்காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின். ஜே.சி.பி ஆபரேட்டரான இவர் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புதிதாக ஜே.சி.பி. ஒன்றை வாங்கி சொந்தமாக தொழில் செய்து வந்தார்.
பின்னர் மேலும் புதிதாக மூன்று ஜே.சி.பி.வாகனம், இன்னோவா கிறிஸ்டா மற்றும் மாருதி பிரீஷா என 6-வாகனங்களை எடுத்து அந்த பகுதியில் பெரிய தொழிலதிபராக வலம் வந்தார். இந்த நிலையில் கழிந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்லின் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில் கருங்கல் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் இருவரும் ரவுடி கும்பலுடன் வந்து தன்னை மிரட்டி நாகர்கோவில் நெல்லை நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர், நீ ஜே.சி.பி ஆபரேட்டராக பணி புரியும் போது தங்க புதையல் கிடைதுள்ளது. அதை வைத்துதான் சொகுசு கார் மற்றும் ஜே.சி.பி வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறாய். எனவே அதில் எங்களுக்கு பங்கு தந்தால் வெளியே சொல்லாமல் நமக்குள்ளே முடித்து கொள்வோம் என கூறியதுடன் தனது நகைகள் மற்றும் சொகுசு கார்கள் இரண்டையும் பறித்து சென்று விட்டனர் என புகாரில் கூறியிருந்தார்.
இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க குளச்சல் ஏ.எஸ்.பி கார்த்திக் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் வாலிபர் ஜெர்லின் மற்றும் கருங்கல் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இருவரும் தாங்கள் ஜெர்லின் மீது வந்த மொட்டை கடித புகாரின் பேரில் அவரை பிடித்து விசாரிக்த்தான் செய்தோம் என்றும் கடத்தலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து ஏ.எஸ்.பி கார்த்திக் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலரை காவல் நிலைய பணியில் இருந்து விடுவித்து கொல்லங்கோடு சோதனை சாவடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து வாலிபரை மிரட்டி கடத்தி சென்ற ரவுடி கும்பல் யார் எனவும் வாலிபருக்கு வாகனங்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அந்த மர்ம கும்பல் ஜெர்லினிடம் இருந்து பறித்த சொகுசு கார்களை திக்கணங்கோடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றது. அந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.