கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் வட மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து விநியோகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ரயில்வே காவல்துறையினர் அண்மை காலமாக தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.22) நிஜாமுதீனிலிருந்து நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு வந்த ரயிலை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது பயணிகள் இருக்கையின் அடியில் கேட்பாரற்று இருந்த பையினை எடுத்து பார்த்த போது, அதில் 61/2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்தவர் யார் என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வடபழனியில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது