ETV Bharat / state

புகை மண்டலமாக மாறிய காந்தி மண்டபம்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி! - காந்தி மண்டபம்

கன்னியாகுமரி: காந்தி மண்டபத்தின் வளாகத்தில் குப்பைகளை தீயிட்டு கொழுத்தியதால் எழுந்த புகை சுற்றுலா பயணிகளை கடும் அவதிக்குள்ளாகியது.

WASTAGE BURNS
author img

By

Published : Aug 2, 2019, 8:00 PM IST

Updated : Aug 2, 2019, 11:33 PM IST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு நிலவும் சீரான தட்பவெப்பநிலை, சுத்தமான காற்றின் காரணமாகத் தான் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அப்படி வருகின்ற சுற்றுலா பயணிகள் மும்மதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபத்திற்குள் அமராமல் செல்வதில்லை.

GANDHI MANDAPAM  WATSTAGE SMOKE BURNS
குப்பைகளை எரித்ததால் எழும் புகை மண்டலம்

அப்படி வந்து அமரும் சுற்றுலா பயணிகள் இங்கு தியானம் செய்யும் அமைதியான சூழல் இருப்பதால் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் மாலை நேரங்களில் இந்த வளாகத்தில் உள்ள பூங்காவிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர். இந்நிலையில் காந்தி மண்டப வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியின் ஊழியர்கள் எடுத்துச் செல்லாமல் அவ்வப்போது இந்த வளாகத்தில் குவித்து வைத்து எரிந்துவிடுகின்றனர்.

காந்தி மண்டபத்தில் குப்பைகள் எரிப்பு

அதேபோல் இன்றும் பிளாஸ்டிக் குப்பைகளை இங்கு போட்டு எரித்ததால் எழுந்த புகை கண்ணுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதனால் இன்று காந்தி மண்டபம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வேறு வழியாக சென்றுவிட்டனர். இந்த வழியாக வந்தவர்களும் காந்தி மண்டப வளாகத்திற்குள் வராமல் தங்கள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு விரைவாக கடந்து சென்றுவிட்டனர். இதனால் வழக்கமாக கூட்டமாக காணப்படும் இந்த பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

எனவே சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் இது குறித்து பேரூராட்சி பணியாளர்களுக்கு எடுத்துக்கூறி இந்த பகுதிகளிலுள்ள குப்பைகளை இங்கு போட்டு எரிக்காமல் அவற்றை எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று எரிக்க உத்தரவிட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:காந்தி மண்டபத்தின் வளாகத்தில் கழிவு பொருட்களை எரித்ததால் எழுந்த புகையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி. குப்பைகளை அள்ளி வேறு இடங்களில் போட்டு எரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.Body:tn_knk_03_waste_smoke_tourist_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

காந்தி மண்டபத்தின் வளாகத்தில் கழிவு பொருட்களை எரித்ததால் எழுந்த புகையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி. குப்பைகளை அள்ளி வேறு இடங்களில் போட்டு எரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் நிலவும் நல்ல தட்பவெப்பநிலை மற்றும் சுத்தமான காற்றின் காரணமாகத்தான் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அப்படி வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மும்மதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபத்திற்குள் வந்து அமராமல் செல்வதில்லை. அப்படி வந்து அமரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு தியானம் செய்யும் அமைதியான சூழல் இருப்பதால் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் மாலை நேரங்களில் இந்த வளாகத்தில் உள்ள பூங்காவிலும் அமைதியாக உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றனர். இந்நிலையில் காந்தி மண்டப வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியின் ஊழியர்கள் அள்ளி செல்லாமல் அவ்வப்போது இந்த வளாகத்தில் குவித்து வைத்து எரிந்துவிடுகின்றனர். அதுபோல் இன்றும் பிளாஸ்டிக்குப்பைகளை இங்கு போட்டு எரித்ததால் எழுந்த புகை கண்ணுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதனால் இன்று காந்தி மண்டபம் பகுதிக்கு வர சுற்றுலா பயணிகள் தவிர்த்து வேறு வழியாக சென்றுவிட்டனர். இந்த பகுதியாக வந்தவர்களும் காந்தி மண்டப வளாகத்திற்குள் வராமல் தங்கள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு விரைவாக கடந்து சென்றுவிட்டனர். இங்கு ஏற்பட்ட புகையால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் வழக்கமாக கூட்டமாக காணப்படும் இந்த பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து பேரூராட்சி பணியாளர்களுக்கு எடுத்துக்கூறி இந்த பகுதிகளிலுள்ள குப்பைகளை இங்கு போட்டு எரிக்காமல் அவற்றை அள்ளி வேறு பகுதிக்கு கொண்டு சென்று அவற்றை எரிக்க உத்தரவிடவேண்டும் என சுற்றுலாபயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
Last Updated : Aug 2, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.