கேரளாவில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலால் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில், இரு மாநில சுகாதாரத்துறையினர் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று களியக்காவிளை ஈஞ்சிவிளைப் பகுதியில் கேரள அரசு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பிரஞ்சு நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இருந்தார். அவரை பேருந்திலிருந்து இறக்கி அவரிடம் விசாரித்த போது, பிரெஞ்ச் குடிமகனான அவரின் பெயர் பொர்ண்ர்ட் மே லாறன் என்பதும், அவர் கேரளாவுக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, அவரை கேரளா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தலை ஒத்திவைக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? - நீதிபதிகள்