கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் அண்மைக்காலமாக கரோனா சிகிச்சை முகாம் செயல்பட்டு வருகிறது.
இதன் நிர்வாகம் கடந்த எழு மாதங்களாக அருகில் உள்ள எல்எல்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இங்கு தொடர்ச்சியாக நான்கு முறை அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து லேப்டாப்களை திருடிச் சென்றனர்.
இந்தக் காட்சிகள் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் லேப்டாப்களை திருடிச் சென்ற நபர்களை பிடிக்க முடியாமல் கோட்டார் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் இருவர் கைது!