வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்பது குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடப்பாண்டு நவராத்திரி விழா தொடங்கவுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரியை ஒட்டி சிறப்பு ஊர்வலங்கள் நடைபெறவுள்ளது குறித்தும் அவர் பேசினார்.
கடந்த 1700ஆம் ஆண்டுகளில் இருந்து நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இதனை மாற்ற எந்த அரசுக்கும் அனுமதி இல்லை என்றார். ஒரே நாளில் சுவாமி விக்ரகங்களை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சில காரணங்களை அடிப்படையாக வைத்து கேரளா அரசு கூறியுள்ளது.
இது பேருந்து சர்வீஸ் அல்ல. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேசி வழக்கம்போல் ஊர்வலமாக சாமி சிலைகளை கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் பிளவு ஏற்பட வேண்டும் என சில எதிர்க்கட்சிகள் எண்ணி வந்தது ஈடேறவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது உள்ளதை விட மூன்றில் ஒரு மடங்கு வெற்றி பெற்றால் கூட அது திமுகவிற்கு போதுமானதாக இருக்கும் நிலையில் அக்கட்சி உள்ளது என திட்டவட்டமாகக் கூறினார்.
கூட்டணி குறித்து கேட்டபோது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக கூட்டணி அமைக்கும், பாஜக தலைமையில் அல்ல என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:மத்திய அரசின் கைப்பாவையாக துணைவேந்தர் சுரப்பா செயல்படுகிறாரா ? - ராமதாஸ் கேள்வி