ETV Bharat / state

பணியின்போது இறந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி; குமரியில் கட்டாய வசூலால் பரபரப்பு!

author img

By

Published : Nov 18, 2020, 6:13 PM IST

மதுரையில் தீ அணைக்கும் பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக கூறி, கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் கட்டாய வசூல் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் வசூல் பட்டியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

fire_department
fire_department

கன்னியாகுமரி: மதுரையில் தீபாவளியன்று துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு வீரர்கள் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்தனர்.

இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள தீயணைப்பு நிலையங்களில் வீரவணக்கம், அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், குழித்துறை, கொல்லம்கோடு, குலசேகரம் ஆகிய ஏழு தீயணைப்பு நிலையங்களிலும், மதுரை தீ விபத்தில் இறந்த வீரர்களுக்கு நிதி உதவியளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிலைய அலுவலர் பத்தாயிரம் ரூபாயும், அடுத்த நிலையில் உள்ளவர் 5 ஆயிரம் ரூபாயும், ஏட்டு 3 ஆயிரம், பயர்மேன் 2 ஆயிரம் ரூபாய் பணம் கட்டாயமாக வசூலித்து, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு, மண்டல அலுவலரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பயர் மேன் நிலை தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் தங்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த கட்டாய வசூல் குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர், 'மனிதாபிமான முறையில், அவரவர் தகுதிக்கு ஏற்ப வசூலித்தால் மனசாட்சியுடன் வழங்க முன் வருவோம்.

இப்படி தகுதிக்கு மேல் நிர்ணயம் செய்து கட்டாயப்படுத்தி அதிகாரிகள் பணத்தை வசூல் செய்கிறார்கள். இப்படி கட்டாயப்படுத்தி லட்சக்கணக்காக வசூலிக்கும் இந்த பணம் அந்த வீரர்களின் குடும்பத்திற்கு சென்றடையுமா' என வேதனையுடன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனுடன், வசூல் பட்டியலும் வைக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாவது திருமணம் செஞ்சு வைங்க’ ; திமுக துணை வட்ட செயலாளரின் மகன் தீக்குளிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.