கன்னியாகுமரி: தோவாளை சந்தையிலிருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏராளமான பூக்கள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மலர் சந்தையில் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து வருகிறது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் பூக்களை வாங்கி செல்ல தோவாளை பூச்சந்தையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கேரளாவிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்களும், வியாபாரிகளும் பூக்களை வாங்கிச் செல்ல வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் மதுரை, அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில், ராயக்கோட்டை, ஒசூர் மற்றும் பெங்களூரிலிருந்து தோவாளை மலர் சந்தைக்கு வித விதமான ஏராளமான பூக்கள் வந்து குவிந்துள்ளன.
பண்டிகை காலம் என்பதாலும், பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் காரணமாகவும் பூக்களின் விலை 3 மடங்கு அதிகத்துள்ளது. இருதினங்களுக்கு முன்பு 1500 ரூபாக்கு விற்பனை செய்த மல்லிகை பூ 3500 ரூபாய்க்கும், இதை போல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த பிச்சி பூ 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று பட்டன் ரோஸ் 170 பன்னீர் ரோஸ் 130 ரூபாய் என அனைத்து பூக்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. இருந்தாலும் தேவை அதிகரிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பூக்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’திமுகவை வேரோடு வீழ்த்திக் காட்டுவோம்’ - ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி