குமரி மாவட்டத்தில் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை; ஆட்சியர் அறிவிப்பு! - மீன்பிடிக்க தடை
கன்னியாகுமரி: மீன் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை என மொத்தம் 61 நாள்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலம் வர உள்ளது. எனவே மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு வரும் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை உள்ள 61 நாட்கள் குமரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில், வழிவலை விசைப்படகுகள் போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், மானிய டீசலும் நிறுத்தம் செய்யப்படும், என்றார்.
Body:தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலம் வர உள்ளது. இதை முன்னிட்டு குமரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலம் வர உள்ளது. எனவே மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு வரும் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை உள்ள 61 நாட்கள் குமரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில், வழிவலை விசைப்படகுகள் போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், மானிய டீசலும் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Conclusion: