ETV Bharat / state

’தொலைத்தொடர்பு கருவிகளுக்கு அதிக தொகை வசூலிக்கும் பிஎஸ்என்எ - மீனவர்கள் குற்றச்சாட்டு - kanniyakumari latest news

ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சேட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகளுக்கு, பிஎஸ்என்எல் நிர்வாகம் அதிக தொகை வசூலிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீனவர்கள் குற்றச்சாட்டு
மீனவர்கள் குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 11, 2021, 8:29 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான ஆழ் கடல் மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன. புயல், மழை எச்சரிக்கை போன்ற முன்னெச்சரிக்கை தகவலை தெரிவிப்பதற்காக, அரசின் சார்பில் மீனவர்களுக்கு சேட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மாதம்தோறும் ரூ. ஆயிரத்து 481 செலுத்தி பயன்படுத்தி வந்தனர்.

தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஏப்ரல் மாதம் முதல், மாதத்தவணை ரூ. 3 ஆயிரத்து 441 ஆகவும், தவறும் பட்சத்தில் ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கரோனா காரணமாகவும், மீன்பிடி தடையாலும் மீனவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள கட்டண உயர்வு மீனவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது.

இதனால் புதிய கட்டண விலை, அபராதத்தொகை இல்லாமல் சேவை வழங்கினால் மட்டுமே சேட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்தப் போவதாக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இல்லையெனில், வரும் 20ஆம் தேதி குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தில், அனைத்து சேட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகளையும் ஒப்படைக்கப் போவதாக தூத்தூர் புனித தோமையார் விசைப்படகு உரிமையாளர்கள், பணியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : 'புலிகளுக்கு பெரும் ஆபத்து; நியூட்ரினோ வேண்டாம்' - பூவுலகின் நண்பர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.