ETV Bharat / state

மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்! தேடும் பணி தீவிரம்... - kanyakumari district news

கன்னியாகுமரி: தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில், கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்
author img

By

Published : Jan 5, 2021, 7:36 PM IST

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மார்த்தாண்டன்துறை பகுதியை சேர்ந்த ரெபின் (35), ததையூஸ் (29), பிரின்ஸ் (29), கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியை சேர்ந்த தோமஸ் உள்பட 9 பேர் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

படகு துறைமுக முகத்துவாரத்தில் இருந்து கிளம்பிய 1 மணி நேரம் கழித்து சுமார் 3 நாட்டிக்கல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது, படகில் இருந்த கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்ற மீனவர் படகில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவரை அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அவரை அங்கு காணக்கிடைக்காததால் மீனவர்கள் படகை கரைக்கு திருப்பி துறைமுக பகுதிக்கு வந்தனர்.

படகில் ஏறாமல் கரையிலேயே இருந்திருக்கலாம் என நினைத்த மீனவர்களுக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து படகு கடலில் சென்று கொண்டிருந்தபோது மீனவர் அபிலாஷ் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்து படகின் உரிமையாளர் ஜோசப் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தார்.

மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்! தேடும் பணி தீவிரம்

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கடலில் தவறி விழுந்த மீனவரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கபடாததால் மீனவரின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.