ETV Bharat / state

எச்சரித்த மீன்வளத் துறை! 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கன்னியாகுமரி: இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்ற மீன்வளத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

காற்றின் வேகத்தால் 10 பேர் பாதிப்பு
author img

By

Published : Jul 20, 2019, 12:07 PM IST

"குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரையும், அலையின் உயரம் 3.5 மீட்டர் உயரம் முதல் 3.8 மீட்டர் வரையும் இருக்கும். எனவே, அப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்" என மீன்வளத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

மீன்வளத் துறையின் எச்சரிக்கை அறிவிப்பையொட்டி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

boat
காற்றின் வேகத்தால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத விசைப் படகுகள்

இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் மீன்களின் விலை அதிகளவில் விற்கப்படுகின்றன.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம்

Intro:இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்ற மீன்வளத் துறை எச்சரிக்கை தொடர்ந்து கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்பு.

Body:இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்ற மீன்வளத் துறை எச்சரிக்கை தொடர்ந்து கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் எனவும் 3.5 மீட்டர் உயரம் முதல் 3.8 மீட்டர் வரை அலையின் உயரம் இருக்கும் எனவும் இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது எடுத்து கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இதை தங்கு தளமாகக் கொண்டு சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன.இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது சீசன் காலம் என்பதால் மீனவர்கள் அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் மற்றும் அலை உயரமாக அடிக்கும் என்ற மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இன்று சின்ன மட்டும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் மீன்கள் விலை அதிகளவில் காணப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.