கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி வன சரகத்திற்கு உட்பட்ட சுங்கான்கடை பகுதியில் பார்த்திபன் என்பவர் தனது வீட்டின் முன்புறம் கூண்டு அமைத்து ஏராளமான கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் வளர்ந்துவரும் கோழிகளில் ஒரு சிலவற்றை காணாமல் போய் உள்ளது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று(அக்.22) அதிகாலை வழக்கம் போல் பார்த்திபன் கோழிகளை திறந்து விடுவதற்கு கூண்டினை திறக்க வந்து உள்ளார்.
அப்போது 15 அடிக்கும் மேல் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கூண்டிற்க்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக வனத்துறை அலுவர்களுக்கு தகவல் அளித்து உள்ளார். சம்பவம் அறிந்து வந்த வன துறையினர் 15 அடிக்கு மேல் நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு