தென் வங்கக்கடலில் உருவான ஃபோனி புயலால் குமரி மீனவர்கள் நாளை (மே 1ஆம் தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஃபோனி புயல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குமரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என பங்கு தந்தை மூலமும், மீன்வளத்துறையினர் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, குளச்சல், முட்டம், தேங்காய் பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர். நாட்டுப் படகுகளும் கடற்கரைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், மீன்பிடி பணியில் ஈடுபடவில்லை. மொத்தமாக குமரியில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து, இன்று ஐந்தாவது நாளாகக் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.