கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோவாளை வட்டாசியர் அலுவலகத்தில் இருந்து பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைக்கபட்டன.
கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள் நகர் வேளாண்மை விற்பனை நிலைய கூடத்தில் வைக்கபட்டு இருந்தது. அதில் உள்ள 3 ஆயிரத்து 110 இயந்திரங்கள், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி, பத்மனாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் வட்டாசியர் அலுவலகத்தில் 546 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து அலுவலர்கள் சீல் வைத்தனர்.அங்கு,துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பும் போடபட்டுள்ளது.
இதையும் படிங்க: