ETV Bharat / state

வனத் துறையைக் கண்டித்து திமுக சாலை மறியல் - சாலையை செப்பனிட நெடுஞ்சாலை துறைக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி: மலை கிராமங்கள் இடையே உள்ள சாலையைச் செப்பனிட நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்காத வனத் துறையைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DMK road blockade condemning forest department

author img

By

Published : Nov 23, 2020, 3:12 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்கார கோணத்திலிருந்து கீரிப்பாறை வரை செல்லும் மலை கிராம சாலை நீண்ட காலமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு உபயோகமற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக கரும்பாறை கீரிப்பாறை, மாறாமலை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிந்துவருபவர்கள் மற்றும் குடியிருந்து வருபவர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்தப் பாதையைச் சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை தயாராக இருந்தும் வனத் துறையினர் அதற்கு உரிய அனுமதி அளிக்காததால் இந்தப் பணிகள் காலம் கடந்துசெல்கிறது. எனவே இந்தப் பாதையைச் செப்பனிட வனத் துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் தடிக்காரன் கோணம் கீரிப்பாறை சாலையில் இன்று 200-க்கும் மேற்பட்ட மலை கிராம தோட்டத் தொழிலாளர்கள், திமுகவினர், பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் செய்தனர்.

இதனால் தடிகார கோணம் - கீரிப்பாறை இடையே போக்குவத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் சாலையைச் சீரமைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக மா.செ-வைக் கண்டித்து திருச்சியில் தொடரும் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.