கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து திமுக நிர்வாகிகளும் உதவ வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், வழக்கறிஞருமான சரவணன், சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆகியோர் 250 பேருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர்.
இப்பொருள்கள் அனைத்தும் ஈத்தாமொழி, பிலாவிளை, மேலகிருஷ்ணன்புதூர், அம்பேத்கார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உடல் ஊனமுற்றோர், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கரோனா உறுதி!