ETV Bharat / state

குமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டம்!

வறுமையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இருவேளை உணவை வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் போராட்டம் நடத்தினார்.

disabled-person-staged-protest-in-kanyakumari-collector-office
குமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டம்!
author img

By

Published : Jun 5, 2021, 5:20 PM IST

குமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார்.

இது ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வள்ளிநாயகம் பேசியபோது, நகர்ந்து செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் மருத்துவத் தேவைகளுக்கும், உணவு வாங்குவதற்கும் வெளியே செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும், நாங்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனம் பழுது ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை சரிசெய்து கொடுப்பதற்கும், வறுமையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் இருவேளை உணவை வீடுகளுக்கே சென்று வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: விளிம்புநிலை மனிதர்களுக்கு உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.