ETV Bharat / state

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Aug 14, 2020, 8:47 PM IST

கன்னியாகுமரி : இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Demonstration demanding the abolition of the e-pass system

தமிழ்நாட்டில் இ-பாஸ் முறையால் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பலமுறை இ-பாஸ் வேண்டி விண்ணப்பித்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பயணிக்க இயலாமல், பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். எப்.சி, சாலை வரி, பெர்மிட் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை விலக்கு அளிக்க வேண்டும். மோட்டார் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும்.

வாகனக் கடன் செலுத்த டிசம்பர் வரை அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை தனியாராக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.