ETV Bharat / state

நேற்று தாய் பலி - இன்று மகளுக்கு திருமணம்: சோகத்திலும் தாயின் கனவை நிறைவேற்றிய மகள்!

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி நேற்று தாய் பலியான நிலையில், முன்னரே நிச்சயிக்கப்பட்ட மகளின் திருமணம் இன்று (மார்ச் 27) நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 5:36 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அருகே கீழ பெரு விளை ஊரைச் சேர்ந்த BSNL நிறுவனத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் சன்முகவேல். அவர் மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்பிரதீஷாவிற்கு முறைப்படி பேசி முடிக்கப்பட்ட திருமணம் இன்று (மார்ச் 27) ஆசாரிப்பள்ளத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 27) திருமணம் நடைபெறவேண்டிய இல்லத்தில் திருமணத்தை முன்னிட்டு கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த மணப்பெண்ணின் தாய் சாந்தி நேற்று மாலை (மார்ச் 26) திடீரென மின்சாரம் தாக்கி, படுகாயமடைந்தார். தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மகளின் திருமணம் நடப்பதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன், மகிழ்ச்சியாக இருந்த தாய் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மட்டுமல்லாமல் இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அந்த ஊரை சேர்ந்த அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (மார்ச் 27) நடைபெற வேண்டிய திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சாந்தியின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்விற்குப் பின் இரவோடு இரவாக மின்தகன மேடை மூலம் தகனம் செய்யப்பட்டது.

ஒருபுறம் தாய் இறந்த சோகம், மறுபுறம் திருமணக் கனவு என என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில், திருமணத்தைப் பின்பு ஒரு நாளில் நடத்தலாம் எனக் கூறிய மணப்பெண்ணிடம் உற்றார், உறவினர்கள் ஒன்று கூடி மணப்பெண்னை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். இதைத் தொடர்ந்து இன்று நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

பெண்வீட்டார் ஒரு சில நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், மணமகன் வீட்டினர் கலந்து கொண்டு தனியார் திருமண மண்டபத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் திருமணம் நடைபெற்றது. கலகலப்பாக, கல்யாண கலையுடன் நடக்க வேண்டிய திருமணம் கலையிழந்து சோகத்துடன் நடைபெற்றது, அனைவரையும் சோகமடையச் செய்தது. மேலும் ஈடு செய்ய முடியாத ஒரு சோகம் ஏற்பட்டபோதும் கூட குடும்ப வாழ்க்கையே தொடங்கத் தயாரான தம்பதியர்களுக்கு ஊர் மக்கள் ஆறுதலும் தெரிவித்து வாழ்த்தும் கூறிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: தாம்பூலப் பைக்கு பதில் சிறுதானிய லட்டுகள்.. கோவையை திரும்பிப் பார்க்க வைத்த தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.