இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வேளாண்மைப் பணிகள் அத்தியாவசிய பணிகளாகக் கருதப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு வேளாண்மைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகள் விழிப்புணர்வுடன் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னிப்பூ பருவத்திற்கு தேவையான நெல் விதைகள், இதர இடுபொருள்கள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் வேளாண் பெருமக்கள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் அருகே உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை உதவி அலுவலர், வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் போன்ற அலுவலர்களை தொலைப்பேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கினால் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்