மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இடதுசாரிஅமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தியப்போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்பு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.