கன்னியாகுமரி: திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை கட்டுமான பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் மீது இளைஞர் காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நவீன மீன் சந்தை திறப்புவிழா நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன மீன் சந்தையை நேற்று(டிச.7)அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் மற்றும் இளைஞர் காங்கிரசார் சிலர் வந்திருந்தனர்.
அப்போது அவர் பேசி கொண்டிருக்கும் போதே நவீன மீன் சந்தை கட்டுமான பணிகளில் திங்கள் நகர் பேரூராட்சி தலைவரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான சுமன் ஊழல் செய்திருப்பதாக எம்எல்ஏ பிரின்ஸ் உடன் வந்த சிலர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனையடுத்து திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எம்எல்ஏ பிரின்ஸ் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ரம்மி, போக்கர் விளையாட்டு சூதாட்டம் இல்லை - ஆளுநரிடம் கோரிக்கை வைத்த இஜிஎப்