கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (மே.25) கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் உள்பட ஐந்து எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”ஆய்வுக் கூட்டத்தில் 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது, தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகளை விற்பனை செய்வது, கரோனா தடுப்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க : நாளை முழு சந்திர கிரகணம்... இந்தியாவில் எங்கு தெரியும்?