கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் வர்த்தகப் பிரிவு கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் வணிகர் பிரிவுத் தலைவர் இமாம் பாதுஷா செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு இ-பாஸ் முறையை எளிதாக்கி உள்ளதால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் இரவு 8 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அதற்குப் பரிந்துரை செய்த டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.