ETV Bharat / state

’சோறு இல்லாமல் நாங்க பட்டினி கிடக்கிறோம்’ - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள் - ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம்

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி உரிய நேரத்திற்கு வழங்கப்படாததால் மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

corona patients agrue with hospital employees for not given food in kanyakumari

author img

By

Published : Jul 5, 2020, 7:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கிவரும் நிலையில், இன்று காலை சில வார்டுகளில் சிற்றுண்டி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலர், மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டபோது, போதிய ஊழியர்கள் இல்லை அதனால் தங்களால் இயன்றவரை வேகமாக சிற்றுண்டி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், காலை 9.30 மணியை தாண்டியும் சிற்றுண்டி கிடைக்காததால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் பசியால் அவதிப்பட்டனர். மேலும், உணவு தரமுடியாது என்றால் எங்களை வீட்டிற்கே அனுப்பிவிடுங்கள் என அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்

அப்போது, சிற்றுண்டிக்கான கணக்கு கொடுத்ததில் தவறு நடைபெற்றுள்ளது. எனவே சிலருக்கு உணவு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக நிர்வாகத்திடம் முறையிட்டு நிலையை சரிசெய்கிறோம் என மருத்துவமனை ஊழியர்கள் விளக்கினர்.

இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பின்னர் நோயாளிகள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட பெண் காவலர்: உற்சாகமாக வரவேற்ற பொது மக்கள்!

’சோறு இல்லாமல் நாங்க பட்டினி கிடக்கிறோம்’ - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.