உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் அரசின் உத்தரவையும் மீறி வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் போலீசாரால் தண்டிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனத்திலும் கார்களிலும் சுற்றி வருபவர்களின் வாகனங்களும் பறிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் போலீசார் எவ்வளவு கெடுபிடிகள் செய்தாலும், அதையும் மீறி குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் தொடர்ந்து வந்தபடி உள்ளனர்.
இந்நிலையில், இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயல்பான நாட்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவது போல் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் மக்கள் உலா வருவதைக் காண முடிந்தது. இவ்வாறு தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்களைக் கண்டிக்க வேண்டிய போலீசார், இவர்களைக் கண்டும் காணாமல் சென்றதால் பொதுமக்களின் கூட்டம் நகரில் அதிகமாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க...ரயில்பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!