ETV Bharat / state

குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாயம்! - கன்னியாகுமரி ,கல்லூரி மாணவி ,காணவில்லை

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கல்லூரி மாணவி காதலனுடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவி காதலனுடன் மாயம்  போலீசார் தேடல்

author img

By

Published : Feb 25, 2021, 7:56 PM IST

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்ன குமாரி (42). இவரது மகள் பிரியதர்ஷினி (20). இவர் அகஸ்தீஸ்வரம் அருகே இயங்கி வரும் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியதர்ஷினி இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், மாணவியின் தாய் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”கல்லூரி மாணவி பிரியதர்ஷினி மணலோடை பகுதியைச் சார்ந்த பெர்லின் (24) என்ற இளைஞரை பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியை முடித்து விட்டு இளைஞருடன் சென்ற மாணவி, இரவில் தன் தாய்க்கு அலைபேசியில் அழைத்து, “ நான் பெர்லின் எனும் இளைஞரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். எனவே என்னைத் தேட வேண்டாம்” என கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். காதலனுடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறோம்” என்றனர்.

இதையும் படிங்க : ஒப்பந்தப் பணியாளர்களின் நிலை 'இலவு காத்த கிளி போல' உள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.