கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை கிலோ ஒன்றிக்கு ரூபாய் 36 முதல் 38 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
மாவட்டத்தில் ஈத்தாமொழி, காணிமடம், அஞ்சுகிராமம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் தேங்காய் சந்தைக்கு தேங்காய் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொள்ளாச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்ட சந்தைக்கு வந்துகொண்டிருந்த தேங்காய் இறக்குமதியையும் வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள்.
மேலும் சென்னை, மதுரை, திருநெல்வேலி உட்பட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு தற்பொழுது குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய் ஏற்றுமதி நடைபெற்றுவருகிறது.
இந்த விலை வீழ்ச்சி வரும் காலங்களிலும் தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தேங்காய் விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தேங்காய் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.