ETV Bharat / state

அரசின் திட்டங்களால் கடல் வளம் பாதிப்பு - கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் தகவல் - ஸு அவுட்ரீச்

அணு மின் நிலைய கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாலும், கடலில் காற்றாலைகள் அமைப்பது போன்ற அரசின் திட்டங்களால் கடல் வளம் பாதிப்பதோடு கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருவதாகக் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 13, 2023, 11:47 AM IST

கன்னியாகுமரி: பூமியில் நாம் வாழ்வதற்குக் கடல் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து உள்ளது. கடல்வழியாக உலக நாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாக நடைபெற்று வருகிறது . கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதோடு ஆக்சிஜன் உற்பத்தி செய்தும் முக்கியமான மருந்துகளின் மூலப் பொருட்களையும் வழங்குகிறது.

workshop on marine resources

மேலும் காலநிலை மாற்றங்களைச் சீரமைக்கப் பேரும் உதவியாக உள்ளது. கடல், சில சமூகத்தினரின் வாழ்வாதாரமாக உள்ளது ஆனால் நெடுங்காலம் அழியாத தன்மை கொண்ட நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் கடலினை சீரழிக்கின்றன. நேரடியாக மக்கள், கடலில் நெகிழிக் குப்பைகளைப் போடுவதாலும், கழிவு நீர் ஓடைகள், ஆறுகள் வழியாகப் பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலந்து வருகிறது.

கடல், இன்று சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது மீன்கள் மற்றும் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மீன்கள் வாழும் கடலில் காற்றாலை நிறுவ அரசு முயல்கிறது, அனல்மின் நிலையம், அணுமின் நிலைய கழிவுகள் கடலுக்குள் கலக்கப்படுகிறது. கடலை உல்லாச சொகுசு கப்பல்கள் நிரப்ப உள்ளது ஒருபக்கம் அரசின் திட்டங்களால் கடல் மாசு அடைந்து வருகிறது. இதனால் கடலுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

எனவே கடலையும், கடல் வாழ் மீன்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களையும் பாதுகாக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு 'ஸு அவுட்ரீச்' அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மற்றும் கொச்சியில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் டெக் கேம்ப் மூலம் ஆரோக்கியமான கடல் மற்றும் மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவை என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நேற்று (ஜூலை 12) தொடங்கிய இந்தப் பயிலரங்கத்தில் கடலோர அமைதி மட்டும் வளர்ச்சி இயக்குநர் அருட்தந்தை டங்ஸ்டன் அவர்கள் தலைமை தாங்கினார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் முன்னிலையில் 'ஸு அவுட்ரீச்' அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் சஞ்சய் மோளூர் மற்றும் பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் விஞ்ஞானிகள், மீனவர்கள், மீனவப் பெண்கள், மீன் வியாபாரம் செய்வோர், மீன் சார்ந்த தொழில் செய்வோர், மீனவ சமூக ஆர்வலர்கள், கடல் ஆராய்ச்சி மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கில் அழிந்து வரும் மீன்களின் தற்போதைய நிலை, மீனவர்களின் தேவைகள் மற்றும் நிலையான மீன்வளத்தைக் கட்டி எழுப்புவதில் மீனவர்களின் முக்கிய பங்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துதல், கடல் மற்றும் மீன்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த மீனவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அந்த அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த தீர்வுகள் ஏற்படுத்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை தாங்கள் அமைப்பு, குழுக்கள், சமூகத்திற்கு எடுத்துச் செல்வதோடு கடலையும் மீன்களையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து கடல்வள ஆராய்ச்சியாளர் பிரியங்கா கூறும்போது, "கடல் வளம் இன்று சுகாதாரமற்ற நிலையில் மாறி வருகிறது. அதில் வாழும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மீன்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காத ஒரு நிலை ஏற்படுகிறது.

மீனவர்களுக்கும் மீன்களுக்கும் எந்தெந்த வகைகளில் பாதுகாப்பை உருவாக்கலாம் என்ற கோணங்களில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது. கடல் வளம் அழிந்து வருவதற்கு முக்கிய காரணங்கள் பல இருந்தாலும் தற்போதைய முக்கிய காரணமாக, அணு மின் உலை கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாலும், கடலில் காற்றாலைகள் அமைப்பது போன்ற அரசின் திட்டங்களாலும் கடல் வளம் பாதிப்பதோடு கடலில் வாழும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது." என தெரிவித்தார்.

மேலும், "கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி இருக்கும் இந்த பயிலரங்கம் தமிழ்நாட்டில் அனைத்து கடலோர பகுதிகளிலும் நடத்தப்பட்டு அதன் தொகுப்பினை மத்திய மாநில அரசுகளுக்குச் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாெறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.