தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், பேருந்துகள் இயங்காத நிலையில் தொழிலாளர்களை ஆப்சன்ட் செய்து சம்பள பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், பிடித்தம் செய்த விடுப்புகளை திரும்பவழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் இராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஸ்டான்லி ராபர்ட் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் எப்.எஸ்.எ.லியோ, சுரேஷ் குமார், செயல்தலைவர் லட்சுமணன், பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.