ETV Bharat / state

குழந்தை திருமணம்: விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர் வெளியீடு! - Kanyakumari District News

கன்னியாகுமரி: குழந்தை திருமண விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார்.

விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர் வெளியீடு

author img

By

Published : Oct 8, 2020, 3:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், இன்று (அக்.08) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு சுவர் ஒட்டிகளை ஒட்ட மாவட்ட சமூக நல்வாழ்வு துறை சார்பில் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் குழந்தை திருமண விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். ஸ்டிக்கரை மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலர் சரோஜினி பெற்றுக் கொண்டார்.

பின் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே பேசுகையில், “இந்திய குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-இன்படி பெண்ணின் திருமண வயது 18 பூர்த்தியடை வேண்டும். இந்த வயதிற்கு முன் நடைபெறும் திருமணம் செல்லாது. இது குற்ற செயல் ஆகும்.

மேலும் குழந்தை திருமணம் செய்யும் மணமகன் மற்றும் திருமணத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்கள் ஆவார்கள். திருமணத்தில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வழங்கப்படலாம்.

எனவே பொதுமக்கள் குழந்தை திருமணத்தை தடுக்க சமூக நல அலுவலரையும், சைல்டுலைன் நம்பரான 1098 -க்கும் தொடர்பு கொள்ளலாம். சமூக நலக் கூட பொறுப்பாளர்கள் திருமணத்திற்கு பதிவு செய்யும்போது மணமக்களின் வயது சான்றிதழை சரி பார்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பேராசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உத்தரவு...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.