கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டார் சவேரியார் ஆலயம் அருகே உள்ள முதலியார் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர், நாகர்கோவிலில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜி, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் ஆண்டோ சப்ரின், நேற்று முன்தினம் (பிப். 16) விடுமுறை என்பதால் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தில் இறுகியதால் சிறுவன் வலியால் அலறினான். கூச்சல் சத்தம் கேட்டு விஜி, அவரது உறவினர்கள், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறுவன் ஆண்டோ சப்ரின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும் சிறுவன் இறந்தது குறித்து கோட்டார் காவல்தூரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயின் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாகன தணிக்கையில் போலி போலீஸ் - நிஜ போலீஸ் துரத்தியதில் உயிரிழப்பு