ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை! - little girl drowns in a water tank

கன்னியாகுமரி: மயிலாடி பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு, சிறுமியின் சகோதரன் கயிரால் கழுத்து இறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
author img

By

Published : Feb 12, 2020, 7:36 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகேயுள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (35). இவர் மயிலாடி பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு சாம் சுந்தர் என்ற 7 வயது மகனும், சஞ்சனா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

நெல்லையில் உள்ள உறவினர் திருமணத்திற்கு அம்பிகா சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் தந்தை செந்திலுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். திருமணத்திற்குச் சென்ற அம்பிகா வீட்டிற்குவந்து பார்த்தபோது சிறுவன் சாம் சுந்தர் ஸ்கிப்பிங் விளையாடும் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

இதற்கிடையில் சிறுமி சஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் தேடி பார்த்தபோது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்துகொண்டிருந்ததை கண்டனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

மேலும் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், குழந்தைகளின் தந்தையிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி தந்தை, இரண்டு மகன்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி. அவரது சகோதரர் கயிரால் கழுத்து இறுகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகேயுள்ள மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செந்தில் 35. மயிலாடி பஞ்சாயத்தில் தண்ணீர் போடும் வேலை செய்து வருகிறார். மேலும் அவர்கள் சமுதாயத்தில் ஊர் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா 32.

இவர்களுக்கு சாம் சுந்தர் என்ற 7 வயது மகனும், சஞ்சனா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதில் சாம் சுந்தர் ஒன்றாம் வகுப்பும், சஞ்சனா எல்கேஜியும் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவர்களது உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டி குழந்தைகள் இன்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில், அம்பிகா வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுவன் சாம் சுந்தர் ஸ்கீப்பிங் விளையாடும் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

இதற்கிடையில் சிறுமி சஞ்சனாவை காணாமல் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்துகொண்டிருந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் பக்கத்து வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிறுவனின் தந்தை சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றுவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் சிறுவனின் தந்தைக்கு தொடர்புகொண்டபோது திருநெல்வேலி மாவட்டத்திற்கு திருமண வீட்டிற்கு சென்றதாகவும் உடனடியாக புறப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சரியான பிறகு அவர் கூறுவதை வைத்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே இது கொலையா அல்லது விபத்தா என்ற உண்மை சம்பவம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

மேலும் சஞ்சனா அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்ததால் அவரது மரணம் அக்கம்பக்கத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.