கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டவுன் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் பாதை, கட்டடங்கள் கட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
ஏற்கனவே இருந்த டிக்கெட் கவுன்ட்டர் கட்டடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று (பிப். 21) முன்பதிவு கவுன்ட்டர் பயணிகள் காத்திருக்கும் அறை போன்றவை அடங்கிய புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், டவுன் ரயில் நிலைய அபிவிருத்தி குழுவினர் உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - தலை தப்புமா நாராயணசாமி அரசு?