கன்னியாகுமரி: நாகர்கோவில் தொகுதியில் 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானர் நாஞ்சில் முருகேசன். அண்மையில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக போக்சோ பிரிவுகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர், தற்போது இவர் கட்சியின் எந்த பொறுப்புகளிலும் வகிக்கவில்லை.
இந்நிலையில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வாழைக்காய் வியாபாரி ஈசாக் என்பவரைப் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அத்துமீறித் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகப் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் வடசேரி போலீசார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் ரயில்வே மறுசீரமைப்பு பணி- தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு!