ETV Bharat / state

கண்கவர் பட்டாம்பூச்சிகள்; மகிழ்ச்சி பொங்க ரசிக்கும் மக்கள்!

நாகர்கோவில்: வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக பறந்துவரும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் பொதுமக்களை பிரம்மிப்பில் ஆழ்த்திவருகிறது.

பட்டாம்பூச்சி
author img

By

Published : May 12, 2019, 11:41 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் அழகாகவும், அமைதியாகவும் பறந்து திரிந்து வந்தன. தற்போது இந்த பட்டாம்பூச்சிகள் வனப்பகுதியிலிருந்து பறந்து தடிக்காரன்கோணம், கொத்தளம் பள்ளம், கீரிப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருவது அங்குள்ள மக்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம்

அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும், அவை சாலையோரங்களில் இருப்பது செடிகள் வளர்ந்துள்ளதை போல காட்சி தருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மே மாதங்களில் அதிக அளவில் காணப்படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருப்பதாகவும், அதை பார்க்க பார்க்க பிரம்மிப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

TN_KNK_01_12_GREEN_BUTTERFLY_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட வன பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான வண்ணத்து பூச்சிகள் தடிகாரகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக பறந்து வருவது அவ்வழியாக செல்பவர்களையும் அப்பகுதி பொது மக்களையும்பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் , கொத்தளம் பள்ளம் , கீரிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக பறந்து வருகிறது இது அவ்வழியாக செல்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது பச்சை கலர் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் சாலையோரங்களில் இருப்பது செடிகள் வளர்ந்துள்ளதை போல காட்சி தருகிறது இதனை அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெகுவாக ரசிப்பதோடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் இந்த பகுதியில் வந்துள்ளதாகவும் இந்த பூச்சிகளை நாங்கள் எந்த தொந்தரவும் செய்வதில்லை இந்த பூச்சிகள் காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அதிக அளவில் பறக்கும் இது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருப்பதோடு மிக அழகாகவும் இருக்கும் என பரவசமடைகின்றனர் இந்த பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் மே மாதங்களில் அதிக அளவில் காணப்படும் என்றும் தெரிவித்தனர் விஷீ வல் : பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறப்பது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.