மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர்-மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய அனைத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று காலை குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், திருவனந்தபுரத்திலிருந்து எந்த பேருந்துகளும் கன்னியாகுமரி மாவடத்திற்கு இன்று காலை முதலே வரவில்லை.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால், நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழில் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்