ETV Bharat / state

பாலம் தரமானதுதானா? அஞ்சும் வேம்பனூர் மக்கள் - kanyakumari

கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகே வேம்பனூர் பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் முறைகேடாக தரமற்ற வகையில் நடைபெற்று வருவதாக பொது மக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

Bridge work issues
author img

By

Published : Jul 28, 2019, 11:02 AM IST

நாகர்கோவில் அருகே மேல சங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட வேம்பனூர் பகுதியிலுள்ள குளத்தின் தண்ணீரை பாசனத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய், பாலம் சிறிய அளவில் இருந்துள்ளது.

பாலம்
இதனால் குளத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இந்த சிறிய பாலத்தை இடித்து பெரிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை கோரிக்கை-விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஒரு கோடி ரூபாய் செலவில் பாலத்தை கட்டத்தொடங்கியது. ஆனால் பாலம் தரமற்ற முறையில் கட்டுப்படுவதாக அப்பகுதி மக்கள் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். தரமற்ற வகையில் கட்டிவரும் இப்பாலம் மழைநேரங்களில் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குளத்து பால பணிகள் தரமற்ற வகையில் நடைபெறுவதாக ஊர் மக்கள் குற்றசாட்டு. மழை வந்தால் தரமற்ற வகையில் பணிகள் நடைபெறுவதால் பாலம் இடித்து விழும் என ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் முறைகேடாக தரமற்ற வகையில் நடைபெற்று வருவதாக பொது மக்கள் மத்தியில் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
அந்தவகையில் நாகர்கோவில் அருகே மேல சங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பனூர் பகுதியில் உள்ள பாசன குளத்தில் உள்ள தண்ணீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய் பாலம் சிறிய அளவில் இருந்து வந்தது.
இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செலவதில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. மேலும், மழை காலங்களில் தண்ணீரை வெளியேற்றவும் இந்த சிறிய பாலம் பயன்படாமல் இருந்தது. இதனால் சிறிய பாலத்தை இடித்து பெரிய பாலமாக கட்டி தர விவசாயிகள் தரப்பில் பல முறை கோரிக்கை வைக்கபட்டது.
இதன் தொடர்ச்சியாக பாலம் கட்ட அனுமதிக்கபட்டு அதற்கான பணிகளும் தொடங்கியது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்டு வரும் குளத்து பால பணிகள் தரமற்ற வகையில் நடைபெறுவதாக ஊர் மக்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். மழை வந்தால் தரமற்ற வகையில் பணிகள் நடைபெறுவதால் பாலம் இடித்து விழும் என ஊர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.