கன்னியாகுமரி மாவட்டம், மேலகாட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதி. இவருக்கு நீண்டகரை பி வில்லேஜுக்கு உள்பட்ட பகுதியில் 51 சென்ட் நிலம் உள்ளது.
லஞ்சம் கேட்ட சார்பதிவாளர்
இந்நிலையில், இந்த நிலத்தைப் பதிவு செய்வதற்காக கணபதிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கிருஷ்ணஜோதி சென்றுள்ளார். அப்போது சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, கிருஷ்ண ஜோதி லஞ்ச ஒழிப்புக் காவல் துறைக்கு புகாரளித்தார். காவலர் கூறிய அறிவுறுத்தலின்படி 51 சென்ட் நிலத்தைப் பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய்க்கான லஞ்சப் பணத்தை சார் பதிவாளரிடம் கிருஷ்ண ஜோதி கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் அதிரடி
அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புக் காவலர் பத்திரப் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'சென்னையில் நாளொன்றுக்கு 15 காவலர்கள்வரை கரோனா பாதிப்பு - காவல் துறை ஆணையர்'