கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்(7). இவர் வாவறை அருகேயுள்ள புதுக்குளத்தில் 2 மணி 6 நிமிடம் தொடர்ந்து நீரில் மிதந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
இச்சாதனை குறித்து சிறுவனின் பயிற்சியாளர் ஜஸ்டின் கூறுகையில்,
நீரில் அதிக நேரம் மிதந்து சாதனை படைத்ததாக ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்டோரின் சாதனை நிகழ்வு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது ஏழு வயது சிறுவன் பிரதீஷ், 2 மணி 6 நிமிடம் வரை தொடர்ந்து நீரில் மிதந்து சாதனை படைத்தார். இதுகுறித்து யூனிக் உலக சாதனை மற்றும் மிராக்கிள் உலக சாதனை உள்ளிட்ட உலக சாதனை அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.