ETV Bharat / state

நாகர்கோவில் ரயில்நிலையத்தில் தீவிர கண்காணிப்பு - நாகர்கோவில் சந்திப்பு

கன்னியாகுமரி: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின் போது காவல் துறையினர்
author img

By

Published : Apr 28, 2019, 9:19 PM IST

இலங்கையில் தீவிரவாதிகளால் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து, அந்நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

அதன் காரணமாக இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ரயில்வே நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் ரயில்நிலையத்தில் தீவர கண்காணிப்பு

இந்தியா முழுவதிலுமிருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குப் பின்னரே ரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மேலும், வெளியூர்களிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன.

Intro:கன்னியாகுமரி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Body:இலங்கையில் தீவிரவாதிகளால் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இலங்கையில் பதட்டமான நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
இதனால் அண்டை நாடுகள் தங்களுடைய பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ரயில்வே நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமான நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறது.
இதனால் இந்த ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு பின்னரே ரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.