ETV Bharat / state

ஓட்டு அரசியலுக்காக கனிமொழி உள்ளிட்டோர் வேஷம் போடுகின்றனர் - பாஜக மாநில தலைவர் எல். முருகன்! - பாஜகவின் பூத் கமிட்டி பொது கூட்டம்

ஓட்டு அரசியலுக்காக கனிமொழி உள்ளிட்டோர் வேஷம் போட்டு அரசியல் நடத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கனிமொழி உள்ளிட்டோர் வேஷம் போடுகின்றனர்
கனிமொழி உள்ளிட்டோர் வேஷம் போடுகின்றனர்
author img

By

Published : Jan 22, 2021, 6:36 AM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாஜக பூத் கமிட்டி பொது கூட்டம் நாகர்கோவிலில் வடசேரி, வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவில் இன்று (ஜன.21) இரவு நடைபெற்றது. இதில், பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசியதாவது, "இந்து மதத்தை கேவலப்படுத்திய, கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கியது திமுக தான்.

தேவர் திருமகனார் நினைவு இடத்தில் நடந்தது போலவே பல இந்து கோவில்களில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு கொடுத்த திருநீற்றை கீழே கொட்டியவர்.

இன்று ஓட்டு அரசியலுக்காக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இந்துகளுக்கு ஆதரவாக இருப்பதாக வேடம் போட்டு மேடைகளில் பேசி வருகின்றனர். வரும் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் திமுகவிற்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பதவிக்காகவே டெல்லிக்கு சென்றவர்கள் திமுகவினர் - அமைச்சர் செல்லூர் ராஜு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.